நீலகிரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ”சுற்றுலா பொங்கல்”

தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலா மாவட்டமாக திகழும் நீலகிரியில் சுற்றுலா பயணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலாப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

நீலகிரி, ஜனவரி 16

தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலா மாவட்டமாக திகழும் நீலகிரியில் சுற்றுலா பயணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலாப் பொங்கல் கொண்டாடப்பட்டது. 

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பல்வேறு காலகட்டங்களில் வரும் பண்டிகை மற்றும் முக்கிய விழாக் காலங்களின் போது சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன் ஒருகட்டமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நீலகிரி மாவட்டம் உதகையில் காணும் பொங்கல் தினமான இன்று படகு இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



இந்த விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பங்கேற்று குத்து விளக்கேற்றித் துவக்கி வைத்தார். மேலும், கரும்பு, பொங்கல் வைத்து வழிபாடுகள் செய்து சுற்றுலா பயணிகளுக்கு வழங்கினார். இதில், நீலகிரி மாவட்ட பழங்குடியினரான கோத்தர் இன மக்கள் தங்களது பராம்பரிய நடனமாடினர். இதுதவிர தமிழர்களின் பாரம்பரிய கலையான தப்பாட்டம் ஆடி சுற்றுலா பயணிகளை மகிழ்வித்தனர். இதனைச் சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வத்தோடு கண்டு ரசித்தனர்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...