யானைகள் முகாமில் பொங்கலை கொண்டாடிய நீலகிரி மாவட்ட ஆட்சியர்

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டார்.

நீலகிரி, ஜனவரி 16

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டார். 

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. முன்னதாக, யானை முகாம் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பூஜையை ஒட்டி வளர்ப்பு யானைகள் கோவில் முன்பு அணிவகுத்து நின்றன. அதனைத் தொடர்ந்து யானைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவுகளோடு கூடுதலாக பொங்கல், ஆப்பிள், மாதுளை, தர்பூசணி, வாழைப்பழம், செங்கரும்பு போன்றவை வழங்கப்பட்டன. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா கலந்து கொண்டு வளர்ப்பு யானைகளுக்கு உணவுகளை வழங்கினார். அதேபோல இந்த நிகழ்வைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். 

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...