நீலகிரியில் பொதுமக்களை வாட்டி எடுக்கும் கடும் குளிர் : விடுதிகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சுற்றுலாப் பயணிகள்

உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவி வரும் கடும் குளிரால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி, ஜனவரி 10

உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவி வரும் கடும் குளிரால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 



நீலகிரி மாவட்டத்தில் இன்று மதியம் திடீரென லேசான மழை பெய்தது. இதனால், ஏற்பட்ட குளுமையான சீதோஷன நிலையை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனுபவித்து மகிழ்ந்தனர். இந்த நிலையில், மாலை வேளையில், கடும் குளிர் வாட்டி எடுத்தது. குன்னூரில் ஜுரோ டிகிரியும், உதகையில் -1 டிகிரி அளவிற்கு கடுமையான குளிர் நிலவியது. பொதுமக்கள், சீக்கிரமாகவே வீடுகளுக்கு முடங்கினர். மேலும், கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால், நகர் வெறிச்சோடிக் காணப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒருசில இடங்களில், டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் விறகுளை வைத்து தீ மூட்டிக் குளிர் காய்ந்தனர். 

உதகை, குன்னூர் போன்ற பகுதிகளில் உள்ள இயற்கை காட்சிகளை ரசிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் விடுதிகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு குளிரின் அளவு அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...