கோவையில் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள்

ஊதிய உயர்வு, பிடித்தம் செய்த தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோவை மண்டல போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை, ஜனவரி 9

ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் நிலுவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, திமுக, தொமுச உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் கடந்த 6 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தமிழக அரசு தரப்பில் நடைபெற்ற பல்வேறு பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்த நிலையில் பணிக்குத் திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கோட்ட அலுவலகங்கள் முன் ஜனவரி 9ம் தேதியன்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

அதன்படி, இன்று மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை மண்டல போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு கோவை மாவட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருவதால் காவல்துறையினர் அதிகளவில் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். 

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...