கிராம மக்களுடன் பொங்கல் கொண்டாடிய கோவை மாவட்ட காவல்துறை

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் மலைகிராம மக்களுடன் வனப்பொங்கல் கொண்டாடினர்!

கோவை மாவட்ட காவல்துறையினர் மலை கிராம மக்களுடன் வனப்பொங்கல் கொண்டாடினர்.

பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவை மாவட்ட காவல்துறை சார்பில் மலைகிராம மக்களுடன் வனப்பொங்கல் கொண்டாட மாவட்ட கண்காணிப்பாளர் Pa.மூர்த்தி தலைமையில் முடிவு செய்யப்பட்டது.

அதனபடி, இன்று பெரிய நாயக்கன்பாளையம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பில்லூரை அடுத்த மானார் என்ற மலை கிராமத்தில் டி.எஸ்.பி. சந்திரமோகன் தலைமையிலான போலீசார் கிராம மக்களுடன் பொங்கல் வைத்து வனப்பொங்கல் கொண்டாடினர்.



இதனை தொடர்ந்து, மாவட்ட காவல்துறை சார்பில் அக்கிராம மக்களுக்கு உடைகள் மற்று. உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

போலீசாருடன் நல்லுறவை மேம்படுத்த இந்த வனப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...