பொங்கலுக்குப் பிறகு மத்திய சுங்கத்துறை அலுவலகம் திருச்சிக்கு இடமாற்றம்

கோவை, ஜனவரி 05

பொங்கல் பண்டிகைக்கு பிறகு கோவையில் செயல்பட்டு வரும் மத்திய சுங்கத்துறை அலுவலகம் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக கோவை சுங்கம் மற்றும் கலால் வரித்துறை ஆணையர் சீனிவாசராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் செயல்பட்டு வரும் சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அலுவலகம் திருச்சிக்கு இடமாற்றம் செய்வது குறித்த முடிவு கடந்த ஆண்டு நவம்பர் மாதமே முடிவு செய்யப்பட்டது. பல்வேறு காரணங்கள் இடமாற்றம் செய்வது தாமதமாகியுள்ளது. என்றார். 

இதனிடையே ஆனால், கோவை விமான நிலையத்தின் மூலம் அதிகமான சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுவதால், உற்பத்தி நிறுவனங்கள் மத்திய சுங்கத்துறை அலுவலகம் திருச்சிக்கு இடமாற்றம் செய்வதை  திரும்பப் பெறுமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தினர். 

ஆனால், உற்பத்தி நிறுவனங்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. அதேவேளையில், பணியாளர் குறைவு காரணமாக சுங்கத்துறை அலுவலகம் கோவையில் டிசம்பர் 31-ம் தேதி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டது. கோவையில் தற்போது செயல்பட்டு வரும் அலுவலகத்தில், 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், வெளி அலுவலகப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், திருச்சிக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர். 

கோவை மத்திய சுங்கத்துறை அலுவலகமானது, கோவை மற்றும் திருப்பூரைச் சேர்ந்த 4 கண்டெய்னர் வைப்புகளைக் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...