போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 05

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், அரசின் ஊதிய ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து நேற்று இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொமுச., சிஐடியு உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வாராகி என்ற வழக்கறிஞர் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தினால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய நோட்டீஸ் கொடுக்காமல் நடைபெறும் அந்தப் போராட்டத்தை தடுக்க வேண்டும். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப நீதிமன்றம் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு இன்று பிற்பகல் தலைமை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, அரசுத் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மனுதாரர் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்தனர்.

“ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம் ஆகிய போராட்டங்களின்போதும் இதேபோன்று பல அறிவுறுத்தல்களை அரசுக்கு வழங்கியுள்ளோம். இதுதொடர்பாக தமிழக அரசு வரும் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். உடனடியாக பணிக்கு திரும்பவில்லை எனில் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...