ஒரே நாளில் 70 விமானப் போக்குவரத்து சேவைகளை வழங்கிய கோவை விமான நிலையம்

கோவை, ஜனவரி 3

புத்தாண்டு தினத்தையொட்டி, கடந்த டிசம்பர் 31-ம் தேதியன்று ஒரே நாளில் 70 விமானப் போக்குவரத்து சேவைகளை வழங்கி கோவை விமான நிலையம் சாதனை படைத்துள்ளது.

இது தொடர்பாக கோவை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களில், ஏ320 மற்றும் பி737 ரக 21 விமானங்களும், ஏடிஆர் ரக 14 விமானங்களும் ஒரே நாளில் தங்களது சேவையை அளித்திருந்தது அதிகபட்சமாகும். இந்த நிலையில், புத்தாண்டு தினத்தையொட்டி, கடந்த டிசம்பர் 31-ம் தேதியன்று ஒரே நாளில் 70 விமானப் போக்குவரத்து சேவைகளை கோவை விமான நிலையம் வழங்கியுள்ளது.

அன்றைய தினம், 12 இண்டிகோ நிறுவன விமானங்களும், 10 ஜெட் ஏர்வேஸ் விமானங்களும், 7 ஏர் இந்தியா விமானங்களும், 3 ஸ்பை விமானங்களும், வெளிநாட்டிற்கு செல்லும் ஏர் அரேபியா, ஸ்ரீலங்கன் மற்றும் சில்க் ஏர்விமானங்களும் தரையிறங்கின. இதில், உள்நாட்டு விமானங்களில் 4,374 பயணிகளும், வெளிநாட்டு விமானங்களில் 510 பயணிகளும் பயணம் செய்துள்ளனர். இதேபோல, 35 விமானங்கள் கோவை விமான நிலையத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றது.

இதன்மூலம், ஒரே நாளில் 70 விமானப் போக்குவரத்து சேவைகளை வழங்கிய பெருமையை கோவை விமான நிலையம் பெற்றுள்ளது. அன்றைய நாளில் 9,500 பேர் பயணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக விமான நிலையம் அதிகாரி கூறுகையில், கோவை விமான நிலையம் வரும் காலத்தில் மிகவும் வளர்ச்சியடையும் என நம்புகிறோம். நாட்டில் உள்ள விமான நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பை கோவை விமான நிலையம் உருவாக்கும். இந்த ஆண்டு சிறந்த விமானச் சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...