தோனிக்கு பத்ம பூஷண் விருது வழங்க மத்திய அரசுக்கு பி.சி.சி.ஐ., பரிந்துரை

கலை, அறிவியல், விளையாட்டு, இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுவர். அடுத்த ஆண்டுக்கான பத்ம விருதுக்களுக்கு தகுதியான நபர்களின் பெயர்களை பரிந்துரைக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. 

இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த முன்னாள் கேப்டன் தோனியை, நாட்டின் உயரிய 3-வது சிறந்த விருதான பத்ம பூஷண் விருதுக்கு, பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்துள்ளது. தோனியை தவிர வேறு யாரையும் பத்ம விருதுகளுக்கு பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்யவில்லை. ஏற்கனவே தோனி, கேல் ரத்னா (2007), பத்ம ஸ்ரீ (2009) விருதுகள் பெற்றுள்ளார்.

இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக வலம் வந்த தோனி(36),  இதுவரை 302 ஒருநாள் (9737 ரன்), 90 டெஸ்ட் (4876 ரன்), 78 சர்வதேச 'டுவென்டி-20' (1212 ரன்) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவரது தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் அரங்கில் 'நம்பர்-1' இடம் பிடித்தது. இந்திய அணிக்கு மூன்றுவிதமான (2007ல் 'டுவென்டி-20', 2011ல் 50 ஓவர் மற்றும் 2013ல் சாம்பியன்ஸ் டிராபி) உலக கோப்பை பெற்றுத் தந்தார். 

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...