ஃப்ரோஷோன் வணிக வளாகத்தில் (PROZONE MALL) நாளை "நதிகளை மீட்போம்" இயக்க ஆதரவு பிரச்சாரம்


அழிந்து கொண்டிருக்கும் நம் நாட்டின் நதிகளை மீட்கும் விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்க நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' இயக்கம் நாடெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றது. இந்த இயக்கத்திற்கு நாடெங்கிலும் பல்வேறு அமைப்பினரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், ஊர்காவல்படை தங்களது ஆதரவை அளிப்பதாக தெரிவித்தது. கோவை ஊர்க்காவல் படை கமாண்டர் தனசேகர் தலைமையில், ”நதிகளை மீட்போம்” இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் 180 ஊர்க்காவல் உறுப்பினர்களுக்கு நதிகளை மீட்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், நதிகளின் முக்கியத்துவத்தையும், நதிகளை மீட்கும் விஞ்ஞான விளக்கங்களும் எடுத்துரைக்கப்பட்டது.

இதேபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை குஜராத்தி சமாஜத்திலும்  நிகழ்த்தப்பட்டது. இதில், 150 பேர் கலந்துகொண்டனர்.

மேலும், அழிந்து வரும் நதிகளை மீட்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாளை (17.09.2017) மாலை 4 மணி முதல் 6 மணி வரை PROZONE MALL-ல் பாரத நதிகள் என்ற தலைப்பில் வினாடி வினா, கலைநிகழ்ச்சி போட்டிகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. கலைநிகழ்ச்சி போட்டியில் 7 முதல் 14 வயதுள்ள குழந்தைகள் மட்டுமே பங்கேற்க முடியும்.  விளையாட்டு போட்டியில் அனைத்து வயது குழந்தைகளும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தொடர்புக்கு : 8300057000

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...