இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை



கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.  இந்த நிலையில், இரண்டு சிறுவர்களுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.

இது தொடர்பாக இன்று (16.09.2017) செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனை முதல்வர் அசோகன் கூறியதாவது:-



சிலருக்கு குழந்தை பருவத்திலேயே மூட்டுகள் வீங்கி காய்ச்சல் ஏற்படும். இதனால், இருதயத்திற்கு செல்லும் குழாய்கள் பாதிக்கப்பட்டு மூச்சுதிணறல் போன்ற சிரமங்கள் ஏற்படும்.

இப்படிப்பட்ட சிரமங்களுடன் இருந்த தேவராஜ் (13) என்பவருக்கும், கனகராஜ் (27) என்பவருக்கும் அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக இருதய குழாய் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் சீனிவாசன், முகமது முன்னத்துல்லாஹ், பிரவீன் ஆகியோர் செய்துள்ளனர்.



தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது 2 முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. அரசு மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை அரசு காப்பீட்டு திட்டம் மூலம் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில், சென்னை, கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இந்த வகை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இது போன்ற நவீன அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...