உதகை மலையரசி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவக்கம்

உதகை மலையரசி கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை மற்றும் தங்கமழை பரிசுத் திட்டத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

தீபாவளி 2017 சிறப்பு விற்பனைக்காக கைத்தறி இரகங்களுக்கு கோ- ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும் இன்று (செப்டம்பர் 15) முதல் வரும் அக்டோபர் 31ம் தேதி வரை 30 சதவிகிதம் அரசு சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறது.

பட்டு சேலைகள்:-

தமிழகத்தின் காஞ்சிபுரம், கோவை, சேலம், ஆரணி, தஞ்சை போன்ற பல்வேறு இடங்களில் நெசவு செய்யப்படும் புதிய வடிவமைப்புகளுடன் கூடிய மென் பட்டு சேலைகள் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 

பருத்தி சேலைகள்:-

தீபாவளி 2017 சிறப்பு விற்பனைக்காக பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட உயர்ரக பருத்தி சேலைகள், கோவை காட்டன், கோரா காட்டன் சேலைகள், நெகமம், காஞ்சி காட்டன், காரைக்குடி செட்டிநாடு காட்டன் சேலைகள், பரமக்குடி காட்டன், சேலம் காட்டன், ஜெயங் கொண்டம் சேலைகள் போன்ற பாரம்பரியமான பருத்தி சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி இரகங்கள்:-

ஏற்றுமதி இரங்களுக்கான படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், ஹோம் ஃபர்னிஷிங் இரகங்கள் குஷன் கவர்கள், குவில்ட் போன்ற ஏற்றுமதி தரத்தில் அழகிய வடிவமைப்புகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளியின் போது உதகை விற்பனை நிலையம் ரூ.105.77 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளது. நடப்பு ஆண்டிற்கு தீபாவளி 2017-க்கு ரூ.130 லட்சங்கள் உதகை விற்பனை நிலையத்திற்கு விற்பனை இலக்காக நிர்ணயக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ர.நடரஜன், துணை மண்டல மேலாளர் (தணிக்கை) ஆர்.மோகன்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை உதகை விற்பனை நிலைய மேலாளர் பொறுப்பு எஸ்.சபீனாநாஸ் மற்றும் இதர பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...