ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி பொன்மலை ரயில்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ரயில் தடவாள பராமரிப்பு பணி காரணமாக கோவை- மயிலாடுதுறை இடையே ரயில் சேவையில் நேர மாற்றம் செய்து ரயில்வேத் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
1. ரயில் எண் 12083 மயிலாடுதுறை கோயம்புத்தூர் ஜன் சதாபி எக்ஸ்பிரஸ் வரும் செப்டம்பர் 25ம் தேதியன்று 14.50 மணியில் இருந்து 15.20 மணிக்கு நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 30 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்படும்.
2. ரயில் எண் 12083 மயிலாடுதுறை- கோயம்புத்தூர் ஜன் சதாபி செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் கோவை ரயில் நிலையத்தை 30 நிமிடங்கள் தாமதாக வந்தடையும்.
3. ரயில் எண் 12083 / 12084 கோயம்புத்தூர் - மயிலாடுதுறை - கோயம்புத்தூர் ஜன் சதாபி எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 30ம் தேதியன்று மயிலாடுதுறை- திருச்சிராப்பள்ளி- மயிலாடுதுறை ஆகிய வழியில் ரத்து செய்யப்படுகிறது.