நீலகிரி ஆட்சியர் தலைமையில் மனுநீதிநாள் முகாம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டம், கேத்தியில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற மனுநீதிநாள் மக்கள் தொடர்பு முகாமில் 56 பயனாளிகளுக்கு ரூ.60,23,000 மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.



இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:-

“இந்த மனுநீதி நாள் விழாவின் நோக்கமே மக்களைத் தேடி அரசு என்பதுதான் பொருள். தமிழக அரசின் உத்தரவின்படி அரசு அலுவலர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களின் தேவைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றனர். தமிழக அரசு மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கியமான திட்டங்களான உழவர் பாதுகாப்பு திட்டம், முதியோர் ஓய்வூதிய திட்டம், மருத்துவ காப்பீட்டு திட்டம், அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட் போன்ற பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சமூக நலத்துறையின் மூலம் தாலிக்கு தங்கம் வழங்குதல், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், விலையில்லா சீருடைகள் 4 செட் வழங்கும் திட்டங்கள் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் விலையில்லா பாடநூல், நோட்டு புத்தகம், சைக்கிள், காலணிகள் மற்றும் மடிகணினிகள் வழங்கும் திட்டமும், உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து நிவாரணம், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகையாக 1225 பயனாளிகளுக்கு ரூ.38,99,650 வழங்கப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் 20650 பயனாளிகளுக்கு ரூ.1000 வீதம் வழங்கப்பட்டுள்ளது.

சமூக நலத்துறையின் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1,405 பட்டதாரி பெண்களுக்கும், 3061 பட்டதாரி இல்லாத பெண்களுக்கும் ஆக மொத்தம் 4466 பயனாளிகளுக்கு ரூ.11.106 கோடி நிதியுதவியும், 12.400 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் இது வரை 16731 பயனாளிகளுக்கு மருத்துவ உதவி ரூ.42,158 கோடி வழங்கப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை மூலம் கடந்த ஆறு ஆண்டுகளில் 13,56,073 மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடபுத்தகம், நோட்டு புத்தகம், காலணிகள், மிதிவண்டிகள் மற்றும் மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளது.

கேத்தி பேரூராட்சி மூலம் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழு 14 பயனாளிகளுக்கு ரூ.29.40 இலட்சத்தில் வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பொது நிதி மூலம் 148 பல்வேறு அடிப்படை வசதி பணிகள் ரூ.564.70 இலட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு திட்டங்கள் மூலம் 78 பணிகள் ரூ.1023.79 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேத்தி பேரூராட்சியிலுள்ள 18 வார்டுகளில் 6 வார்டுகளில் மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் வாங்கப்படுகிறது. மீதமுள்ள 12 வார்டுகளில் மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 3 ஆண்டுகளில் 468 தனி நபர் இல்லக்கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. கேத்தி பேரூராட்சியை திறந்த வெளியில் மலர் கழித்தலற்ற பேரூராட்சியாக மாற்றும் பொருட்டு அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகளை விரைந்து கட்டி முடிக்குமாறு தெரிவித்தார்.

மேலும் இந்த ஊரை சுத்தம் செய்த பிறகு அதை சுத்தமாக வைத்து கொள்வதற்கு உங்களுடைய பங்களிப்பு அவசியம். தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. அவற்றை எல்லாம் பொது மக்களுக்கு வழங்க அரசு அதிகாரிகள் தயாராக உள்ளோம். எனவே பொதுமக்களாகிய நீங்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து 150 மனுக்கள் பெறப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், குன்னூர் கோட்டாட்சியர் கீதாப்ரியா, அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...