ஆர்.எஸ் புரம் பகுதியில் 'ஒன் சைடு பார்க்கிங்' முறையை காவல்துறை ஆணையர் துவங்கி வைத்தார்



கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக கோவை ஆர்.எஸ் புரம் 23வது வார்டு பகுதிக்குட்பட்ட கெளலிபிரவுன் சாலை முதல் ராமலிங்கம் சாலை வரை மொத்தம் 15 வீதிகளில், 14.09.2017 (இன்று) முதல் 'ஒன் சைடு பார்க்கிங்' முறை அமல்படுத்தப்படுகிறது.



இதனை கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் இன்று தொடக்கி வைத்தார். பின்னர், இதுகுறித்து அவர் கூறுகையில், "வாகன கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக இந்த 23-வது வார்டு பகுதியில் 'ஒன் சைடு பார்க்கிங்' வசதியை ஏற்படுத்தி கொடுத்த வெல்ஃபேர் அசோசியேஷன்-க்கு நன்றி. இந்த 'ஒன் சைடு பார்க்கிங்' வசதியினை இங்கு வசிக்கும் பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். மாதம் ஒரு பகுதி, என மாதம் ஒரு முறை 'ஒன் சைடு பார்க்கிங்' முறை மாற்றி அமைக்கப்படும்".



மேலும் இதுபற்றி கூறுகையில், "23வது வார்டு குடியிருப்பு மக்களின் நீண்ட நாள் வேண்டுகோளுக்கு இணங்க 'ஒன் சைடு பார்க்கிங்' அமைத்து தரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை இப்பகுதி மக்கள் சரியான முறையில் பின்பற்ற வேண்டும். வீதிகளின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

திருட்டு மற்றும் கொலை சம்பவங்களை கட்டுப்படுத்தும் விதமாக, மக்கள் அவரவர் வீடுகள் மற்றும் தொழில் ஸ்தாபனங்களில் சிசிடிவி காமேராக்களை பொறுத்திட வேண்டும், என்று காவல் ஆணையர் அமல்ராஜ் வலியுறுத்தினர்.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...