கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரவு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர்

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் இரவு முழுவதும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈட்டுபட்டுள்ளனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,8 வது ஊதிய குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையிலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் இரவு முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்காக அரசு ஊழியர்களால் ஆட்சியர் அலுவலகத்தில் இரவு உணவு சமைக்கப்பட்டது. இரவு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் காத்திருப்பு போரட்டத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதையடுத்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவையில் அவ்வப்போது மழை பெய்ந்த நிலையிலும் போராட்டத்தை அரசு ஊழியர்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...