ராஜவாய்க்காலைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளையும் மீட்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா..?


கோவையில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. அங்கு குடியிருப்போருக்கு மாற்று வீடுகளை ஒதுக்கி நீர்நிலைகளை மீட்பதாக 10 ஆண்டுகளுக்கு முன்பே அரசு அறிவித்தது. அதனடிப்படையில், கோவை போத்தனூர் அருகே உள்ள அணைமேடு, முத்துகாலனி, சேரன் நகர், அண்ணா காலனி, உக்கடம், பெரியகுளம், தெற்கு கரை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. கடந்த 2 நாட்களாக நடந்த நடவடிக்கையின் மூலம்  1000-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 

இதனால், கோயம்புத்தூர் மாநகராட்சியும், குடிசை மாற்று வாரியமும் இணைந்து மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததுள்ளது. 

இந்நிலையில், கோவையில் உள்ள நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு :-



சிங்காநல்லூர் குளம் மற்றும் வாய்க்காலில் சுமார் 1500 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. பேரூர் பெரிய குளத்தில் விவசாய  நிலங்களாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. செல்வம்பதி குளம் மற்றும் குமாரசாமி குளத்தில்  சுமார் 3500 வீடுகள்  ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.மேலும், தமிழ்நாடு நுகர்வோர் தானியக் கிடங்கு,விவசாய பல்கலைக்கழகம் ஆகியவை ஆக்கிரமித்துள்ளன.கோயமுத்தூர் அணைக்கட்டு எனும் தேவிசிறை தடுப்பணை நெடுஞ்சாலைத் துறையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 530 அடி அகலம் கொண்ட அணையானது 150 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. செங்குளம் விவசாய நிலங்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.





போத்தனூர் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ராஜவாய்க்கால் மீட்கப்படுவதைப் போல, மேற்கண்ட ஆக்கிரமிப்பு நீர்நிலைகளும் மாநகராட்சியால் மீட்டெடுக்கப்படுமா என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...