எடப்பாடி பழனிசாமி கூட்டியது பொதுக்குழு கூட்டமல்ல, சாதாரண கூட்டம் மட்டுமே - டிடிவி தினகரன் அலறல்

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கூடிய அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலா மற்றும் துணைப் பொதுச் செயலாளராக இருந்த டி.டி.வி.தினகரன் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் மதுரையில் டிடிவி தினகரன செய்தியாளர்களிடம் பேசியதாவது :- இன்று அவர்கள் கூட்டியது பொதுக்குழு கூட்டமல்ல. வெறும் கூட்டம் மட்டுமே. எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும், அதற்கு, சட்ட ரீதியான அங்கீகாரம் கிடையது என நீதிமன்றம் கூறியுள்ளது. அக்.,23ல் வழக்கு விசாரணைக்கு வரும்போது தீர்மானம் செல்லுமா செல்லாதா என நீதிமன்றம் சொல்லும் போது தெரியவரும்.

இந்த அரசை வீட்டை விட்டு அனுப்புவதற்கான பணியில் இறங்கிவிட்டேன் என்பதை நேற்றே கூறினேன். இன்றும் அதனை கூறுகிறேன். ஜெயலலிதா இடத்தில் வேறு யாரையும் பார்க்க முடியாது என சொன்னவர்கள்தான் சசிகலாவை அமர வைத்தவர்கள். ஜெயலலிதா இருந்த முதலமைச்சர் இடத்தில், எடப்பாடி பழனிசாமியை பார்க்க விரும்பவில்லை. இதை செய்ய இறங்கி விட்டேன். ஜெயலலிதா இருந்த சிம்மாசனத்தில் இவர்களை பார்க்க முடியாது என்பதுதான் மக்கள், தொண்டர்களின் விருப்பம்.

தற்போது, நடப்பது ஜெயலலிதா ஆட்சி இல்லை. எடப்பாடி அண்ட் கோ ஆட்சி. துரோகமும், துரோகமும் இணைந்து ஆட்சி செய்கின்றனர். இரட்டை இலையை முடக்கிய, அரசுக்கு எதிராக ஓட்டு போட்ட பன்னீர் செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி கை கோர்த்துள்ளார். தேர்தலில் நிற்க சில அமைச்சர்களுக்கு பயம். 2 மாதத்திற்கு முன்பே இந்த ஆட்சிக்கும், கட்சிக்கும் சம்பந்தமும் இல்லை என சொல்லியுள்ளேன். தன்னை சந்திப்பவர்கள் பேசுபவர்கள இந்த ஆட்சி வேண்டாம். இதை நீக்கிவிட்டு ஜெயலலிதா ஆட்சி கொண்டு வாருங்கள் என தன்னிடம் கூறுகின்றனர்.

அவர்களால் தேர்தலில் நிற்க முடியாது. டிபாசிட் வாங்க முடியாது. அங்கு சில எம்எல்ஏக்கள் முழுமனதாக இல்லை. ஆட்சி போனதும் தங்களுடன் வருவார்கள். நாங்கள் திமுகவுடன் கை கோர்த்துள்ளதாக அமைச்சர்கள் பொய் பிரசாரம் செய்கின்றனர். தேர்தல் களத்தில் தி.மு.க.,வுக்கும் தங்களுக்கும் போட்டி இருக்கும். அதில் வெற்றி பேறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க 10 எம்எல்ஏக்களுக்கு விருப்பமில்லை. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, வீரமணி, பெஞ்சமின், 5 எம்எல்ஏக்களை அழைத்து கொண்டு வெளியேற முயற்சி செய்தனர். அவர்களை தடுத்து நிறுத்தியது நாங்கள்தான். செம்மலை, எடப்பாடி பழனிசாமியை ஏற்று கொள்ள முடியாது என்பதால் தான் வெளியே சென்றார்.

ஆளுநர் 2 நாட்களில் முடிவு எடுப்பார். இல்லையென்றால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பேன். தற்போது உள்ள அரசுக்கு பெரும்பான்மை இல்லை. தங்களிடம், 21 எம்எல்ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட ஆளுநர் தயங்குகிறார். இரு தரப்பும் தேர்தலில் நின்று வெற்று பெறும் போதுதான் யார் உண்மையான அதிமுக என்பது தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...