தொடரும் ஜாக்டோ, ஜியோ அமைப்பினரின் போராட்டம் - நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்கள் சங்கத்தினரும் பங்கேற்பு

புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் 5-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.



ஜாக்டோ ஜியோ அமைப்பின் இந்தத் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் சங்கத்தினரும் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒப்பாரி வைத்து விநோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போராட்டத்தை கைவிடுமாறு போலீஸார் அறிவுறுத்தியும், அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர்.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...