கோவையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பள்ளி மாணவர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை வெள்ளலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 80-க்கும் மேற்பட்டோர் இன்று (11,09,2017) காலாண்டுத் தேர்வை புறக்கணித்து பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர். 

இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து நீர் தேர்வுக்கு எதிராகவும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வை  ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.



இறுதியில், பள்ளி ஆசிரியர்கள் அறிவுறுத்தலின் பேரில் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இருப்பினும், மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்ததால், பள்ளியில் பதற்றம் நிலவியது.

இதனைத்தொடர்ந்து மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாக பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வீரமணி மற்றும் கல்லூரி மாணவர்கள் பிரபாகரன், தாமோதரன் ஆகியோரை போலீஸார் கைது செய்து அழைத்து சென்றனர். 

இது குறித்து பள்ளி மாணவர்கள் கூறுகையில், "11ம் வகுப்பு பொதுத் தேர்வால் இரட்டை பணி சுமை ஏற்படுகிறது. தமிழகத்தில் நிரந்தரமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...