சிதிலமடைந்த நிலையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் - வெளியேறுமாறு குடியருப்புவாசிகளுக்கு எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கோவை பிரிவின் மூலம் தவணை முறையிலான சொந்த குடியிருப்புகளும், அரசு அலுவலர்களுக்கான வாடகை குடியிருப்புகளும் கட்டப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி, வழங்கப்பட்ட  குடியிருப்புகளில் சிதிலமடைந்துள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேற கோவை வீட்டு வசதிப்பிரிவின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செயற்பொறியாளர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கோயம்புத்தூர் வீட்டு வசதி பிரிவின் கீழ் சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தில் தவணை முறையில் வழங்கப்பட்ட 960 அடுக்குமாடி குடியிறுப்புகளும், சித்தாப்புதூர் திட்டப்பகுதியில் பயன்பாட்டில் உள்ள 216 அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஓதுக்கீடுதாரர்கள் குடியிருந்து வருகின்றனர். 

தற்சமயம், பெறப்பட்ட ஒதுக்கீடுதாரர்கள் தங்களது வீடுகளை முறையாக பராமரிக்காததாலும், கனமழை பெய்து வருவதாலும் சிதிலமடைந்து, குடியிருக்க தகுதியில்லாத நிலையில் உள்ளது. எனவே, மேற்கொண்ட குடியிருப்புகளை காலி செய்துவிட்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைத்தால் அதனை இடித்து விட்டு புதியதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

இது, தொடர்பாக ஏற்கனவே பலமுறை வீட்டு வசதி வாரிய கோவை பிரிவின் எச்சரிக்கை நோட்டீஸ்கள் மூலம் ஒதுக்கீடுதாரர்கள் மேற்கண்ட குடியிருப்புகளை தாங்களாகவே, காலி செய்யுமாறு பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற அறிவிப்பிற்கு பின்னரும் காலி செய்ய தவறி தொடர்ந்து குடியிருக்க முயற்சி செய்யும் ஒதுக்கீடுதாரர்கள் தங்களது உடமைக்கோ, உயிருக்கோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் தங்களே பொறுப்பு என தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கோவை பிரிவின் செயற்பொறியாளர்ஃ நிர்வாக அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார். 

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...