மியான்மரில் மத வெறி மனிதப் படுகொலையை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

மியான்மரில் தொடர்ந்து நடைபெற்று வரும் காட்டுமிராண்டித்தனமான மத வெறி மனித இனப்படுகொலையை கண்டித்து கோவை மாவட்ட தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் இன்று மாலை 5 மணியளவில் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் முகமது முசீர் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மியான்மர் மதவெறி படுகொலைகளை உடனடியாக தடுக்க ராஜிய ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், பல வருடங்களாக விசாரணையின்றி சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லீம்களை விடுதலை செய்யவும், முஸ்லீம், கிருஸ்துவ வழிபாட்டு தலங்கள் கட்ட அனுமதி வழங்கவும், கபர்ஸ்தான், கல்லறைத் தோட்டங்களுக்கு நிலம் வழங்கவும், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக  கிளையை தமிழகத்தில் துவக்கிடவும் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் ஜெரோம் ரோட்ரிக்ஸ், மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் புனிதா மற்றும் இந்து, கிருஸ்த்துவர் மற்றும் முஸ்லீம் மதங்களை சார்ந்த அனைவரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...