நீட் தடை கோரி போராட்டம்...! போராட்டத்திற்கு தடை விதித்த உச்ச நீதி மன்றம்...!

தமிழகத்திற்கு இந்த வருடம் நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. நீட் தேர்வு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உறுதியுடன் கூறியது. இதனையடுத்து, அதிக மதிப்பெண் கிடைத்தும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். 

இதனையடுத்து தமிழகம் முழுதும் போராட்டம் வெடித்துள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். அனிதா மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி மாணவர்கள், அரசியல் கட்சிகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும், அனிதா தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ்., மணி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சிகள், தனிநபர்கள் போராடக்கூடாது. சாலை மறியல், கடையடைப்பு போராட்டம் நடத்தக்கூடாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில் கொண்டு வரப்பட்ட நீட் சட்டத்திற்கு எதிராக போராடக்கூடாது. கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.

உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக இருக்கும் என்பதால், எந்த வகையான போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது. பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பிரச்னைகளை அரசு கையாள வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி அனிதா மரணம் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு உத்தரவை பிறப்பித்தனர்.  மேலும், தலைமை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.,15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதனிடையே, நீட் தேர்வில் விலக்கு, அனிதா தற்கொலைக்கு நீதி விசாரணை கேட்டு, இன்று (08,09,2017) திருச்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு தி.மு.க., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால், இந்த மாநாடு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...