கோவையில் பெண் காவலரிடம் தவறாக நடந்துகொண்ட உதவி ஆணையர் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைப்பு

கோவையில் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் போது பெண் காவலரிடம் தவறாக நடந்து கொண்டதாக சர்ச்சையில் சிக்கிய உதவி ஆணையர் (சட்டம் ஒழுங்கு) ஜெயராமன் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு காந்திபுரம் பகுதியில் மாணவ, மாணவியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைது செய்தனர்.



அப்போது, போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையில் உதவி ஆணையர் (சட்டம் ஒழுங்கு) ஜெயராமன் அங்கிருந்த பெண் காவலரிடம் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்தான வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனைத்தொடர்ந்து, உதவி ஆணையர் (சட்டம் ஒழுங்கு) ஜெயராமனிடம் நேற்று காலை தொடங்கி மாலை வரை மாநகர காவல் துறை துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) லட்சுமி விசாரணை நடத்தினார். பின்னர் ஜெயராமனை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும், காவல் துறை உதவி ஆணையர் ஜெயராமனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...