கவுரி லங்கேஷ் படுகொலையை கண்டித்து கோவையில் அனைத்து பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

எழுத்தாளரும், லங்கேஷ் வார இதழின் முதன்மை ஆசிரியருமான கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இவர் இடது சாரி சிந்தனையாளர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை மிகக் கடுமையாக எதிர்த்தவர். சமூக அவலங்கள் குறித்து எழுதிய லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



அதன்படி, கோவையில் இன்று மாலை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது, மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடுமையான சட்டங்கள் இயற்றக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.



தொடர்ந்து, செய்தியாளர்களிடையே தீக்கதிர் நாளிதழ் கோவை பதிப்பின் ஆசிரியர் கண்ணன் பேசுகையில், 'மதச்சார்பற்ற கருத்துக்களை தொடர்ந்து எழுதி வந்த கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டது கண்டனத்திற்கு உரியது. அவர் விட்டுச்சென்ற பேனாவை மற்ற பத்திரிகையாளர்கள் தாங்கிப்பிடிப்பார்கள்.

வகுப்புவாதம் பேசுபவர்கள் கருத்தியல் ரீதியாக மோதாமல், ஆயுதங்களை கொண்டு கொலை செய்வது ஏற்க முடியாத ஒன்று. இந்த அச்சுறுத்தல்களுக்கு முற்போக்கு எழுத்துக்கள் என்றும் அடிபணியாது. எங்கள் பேனாவை வலிமையான ஆயுதமாக எடுத்து தொடர்ந்து மதவெறிக்கு எதிரான கருத்துக்களை எழுதுவோம்' என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...