ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்த்துக்களோடு கோவையில் நடந்த திருமணம்



கோவையில் நடைபெற்ற திருமனத்தின் போது ஆதரவற்ற குழந்தைகள் திருமண தம்பதியினரை மனமார வாழ்த்தியது அனைவரது மனதையும் நெகிழ வைத்தது.

கோவை கருமத்தம்பட்டியில் வசித்து வரும் சுப்ரமணியம் பிரபாவதி தம்பதியினரின் மகன் அரவிந்த். திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த விஷ்வநாதன் மணிமேகலை தம்பதியினரின் மகள் சாதனாவிற்கும் அரவிந்திற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று அவர்களது திருமணம் சோமனூரை அடுத்து கருமத்தம்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள கொங்கு கலையரங்கத்தில் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது.

இவர்களது திருமண நிகழ்ச்சிக்கு சோமனூரை அடுத்து நல்லா கவுண்டம்பாளையத்தில் உள்ள பிரபஞ்ச சேவா அமைதி மையத்தில் இருந்து 135 குழந்தைகளுக்கு அழைப்பிதழ் கொடுக்கபட்டு, அவர்கள் அனைவரும் பேருந்து மூலம் திருமண மண்டபதிற்கு அழைத்து வரப்பட்டனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, குழந்தைகள் அனைவரும் மணமேடையில் மணமக்களை ஒருமித்த குரலில் வாழ்த்தியதும் தங்கள் இல்லத்திருமணம் போல துள்ளிக்குதித்து ஓடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பின்னர், அந்த குழந்தைகள் திருமண தம்பதியினரை மனமார வாழ்த்தியது அனைவரது மனதையும் நெகிழ வைத்தது.

இது குறித்து மணமகனின் தந்தை சுப்ரமணியம் கூறுகையில், வருடத்தில் நான்கு, ஐந்து முறை ஆதரவற்றோர் மையத்திற்கு குடும்பத்துடன் சென்று வருகிறேன். மகன்களின் பிறந்த நாளின் போது குழந்தைகள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். மற்ற பண்டிகை நாட்களில் அங்கு செல்லும் போது தன்னால் முடிந்ததை செய்து வருகிறேன்.

தனது மகனின் திருமணத்தையும் ஆதரவற்ற குழந்தைகளின் முன்னிலையில் நடத்த முடிவு செய்து, குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்புடன் இரு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு குழந்தைகள் அழைத்து வரப்பட்டனர்" என்றார்.

தொடர்ந்து, ஆதரவற்ற குழந்தைகளை தங்கள் சொந்தமாகக் கருதி விழா முடிந்த பிறகு அவர்களை பத்திரமாக அவர்கள் இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தனர் திருமண வீட்டினர்.

இன்றைய சூழலில் உறவினர்கள் அல்லது நண்பர்களின் திருமணதிற்கு வருபவர்கள் பல்வேறு கல்யாண அழைப்புகளை கையில் வைத்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தக்கூட நேரமில்லாமல், பந்தியில் பெயரளவிற்கு அமர்ந்துவிட்டு உணவை வீணடித்துச் செல்லும் நிலையில், ஆதரவற்ற குழந்தைகளை அழைத்து அறுசுவை உணவளித்து அவர்களின் வாழ்த்துகளைப் பெற்ற மணமக்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பாராட்டுக்குரியவர்கள். இந்த நல்ல உள்ளங்களை நாமும் வாழ்த்துவோம்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...