நீலகிரி கோடப்பமந்து கால்வாயினை திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

நீலகிரி மாவட்டம், உதகை, கோடப்பமந்து கால்வாயினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டம், உதகையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் குப்பைகளுடன் மழைநீர் கோடப்பமந்து கால்வாயில் வழிந்தோடியதால், ஆங்காங்கே குப்பைக் கழிவுகள் தேங்கியுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.



இந்நிகழ்வின் போது, உதகை ஏரியினை வந்தடையும் கோடப்பமந்து கால்வாயில் கனமழை பெய்யும்பொழுது ஏற்படும் வெள்ளநீர் தேங்காமால் சென்றடையவும், உதகை ரயில் நிலைய சாலையில் மழைநீர் தேங்காமல் வழிந்தோட உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதேபோல மத்திய பேருந்து நிலைய கால்வாய்களில் மழைநீர் தேங்காமல் முறையாக கோடப்பமந்து கால்வாயில் சென்றடைய உடனுக்குடன் குப்பைகளை அப்புறப்படுத்தி சீர்செய்யுமாறும், உதகை ஏரிக்கு கோடப்பமந்து கால்வாய் மூலம் வந்தடையும் மழைநீரில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் உடனுக்குடன் பார்த்துக்கொள்ளுமாறும் நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.



இந்நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் (ம) ஆணையாளர் (பொ), மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...