குடும்ப அட்டைதாரர்கள் தங்களது மின்னனு குடும்ப அட்டையினை நியாய விலைக் கடைகளில் பெற்று கொள்ளலாம்


கோயம்புத்தூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது மின்னனு குடும்ப அட்டையினை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளரை அணுகி (10.09.2017)க்குள் பெற்று கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டங்களில் அமைந்துள்ள 1,419 நியாய விலைக் கடைகளில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ள 9,79,324 குடும்ப அட்டைகளுக்கு மின்னனு குடும்ப அட்டைகள் (Smart Card) அச்சிட்டு வழங்கம் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

ஆதார் அட்டை பெறுவதற்கு பயனாளிகளால் பதிவு செய்யப்பட்ட விபரங்கள் மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்களில் அடிப்படையில் மின்னனு குடும்ப அட்டை தயாரித்து வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அனைத்து பதிவுகளும் சரியாக இருந்து அச்சிட்டு வரப்பெற்ற 6,87,000 மின்னனு குடும்ப அட்டைகள் அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொருட்டு அந்தந்த நியாய விலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 5,13,000 பயனாளிகளுக்கு மின்னனு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 1,74,000 மின்னனு குடும்ப அட்டைகள் அந்தந்த நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டி நிலுவையில் உள்ளது.

ஏற்கனவே, பழைய குடும்ப அட்டைகள் வைத்திருந்து மின்னனு குடும்ப அட்டை பெறாமல் உள்ள பயனாளிகள் (10.09.2017)க்குள் தங்களுக்குரிய மின்னனு குடும்ப அட்டையினை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளரை அணுகி பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...