அதிமுக அணியில் சேர்க்கவில்லை என்றால் பல ரகசியங்கள் வெளியிடப்படும்- தினகரன் அணி நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

அதிமுகவில் மூன்று அணிகளும் ஒன்று சேரவில்லை என்றால் பல ரகசியங்களை வெளியிட வேண்டியிருக்கும் எனவும் ரகசியங்களை வெளியிட்டால் தனது உயிருக்கே பாதுகாப்பு இருக்காது என கோவை டி.டி.வி.தினகரன் ஆதரவு அணி நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் எச்சரிக்கை விடுத்தார்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜின் கார், பீளமேடு அருகே இன்று காலை அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. காரில் அவரது மகன் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த எம்.பி.நாகராஜ், விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் விபத்து குறித்து கார் ஓட்டுனர் மற்றும் காவல் துறையினரிடம் கேட்டறிந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.



அப்போது அவர் கூறியதாவது:- "அதிமுகவில் அணிகள் என்று கிடையாது. கருத்து வேறுபாடுகளால் மட்டுமே பிரிந்து இருக்கின்றோம். அனைத்து தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டும். 

ஜெயா டி.வி-க்கான பணிகளை 5 ஆண்டுகளாக தான் கவனித்து வந்தேன். அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அனைவரும் இணைய வேண்டும் என்பதற்காகவே தன்னைப் போன்றவர்கள் அமைதியாக இருக்கிறோம். ஆனால் தங்களை ஒதுக்கி வைத்து விட்டு செயல்படுகின்றனர்.

மூன்று பேரும் ஒன்று சேரவில்லை என்றால் பல ரகசியங்களை வெளியிட வேண்டியிருக்கும். ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கில் கூட்டு சதி என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கிற்காகவே சசிகலா சில காலம் விலக்கி வைக்கப்பட்டு இருந்தார். டி.டி.வி. தினகரன் கட்சிக்காகவே சிறைக்கு சென்றார். சசிகலாவிடம் கட்சி பதவிக்காக சென்று நிற்காதவர் என எவருமே கிடையாது. பல உண்மைகளை வெளியிட்டால் தனது உயிருக்கே பாதுகாப்பு இருக்காது. கூட்டணிகளை கூட இறுதி செய்தது சசிக்கலாதான். 

அதிமுக-வுடன் கூட்டணி வைத்த கட்சித்தலைவர்கள் யாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சீட்டுகளை முடிவுசெய்தனர் என்பதை தெரிவிக்க வேண்டும். இன்று நடந்த இந்த விபத்து இயற்கையாக நடந்ததாக இருக்கலாம் அல்லது தன்னை அச்சுறுத்துவதற்காக நடத்தப்பட்டதாகக் கூட இருக்கலாம்" என நாகராஜன் தெரிவித்தார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...