மாநகராட்சி ஆணையர் அறிவுரையின்படி பள்ளி, கல்லூரிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அறிவுரையின்படி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு கவனம் செலுத்தி டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாநகராட்சியில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை ஆணையர் அறிவுரையின்படி மாநகராட்சி நகர்நல அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் பல்வேறு சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட் 28) மாநகராட்சி மத்திய மண்டலத்தில், 25, 45, 50, 51, 54, 80, 81, 82, 83, 84 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட 12 பள்ளிகளிலும், தெற்கு மண்டலத்தில், 76, 78, 86, 87, 89, 90, 91, 92, 94, 95, 96, 100 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட 24 பள்ளிகளிலும், வடக்கு மண்டலத்தில், 3, 4, 27, 28, 38, 39, 42, 44 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட 11 பள்ளிகளிலும், கிழக்கு மண்டலத்தில், 35, 36, 37, 59, 60, 61, 63, 67, 69, 75 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட 2 கல்லூரியும் மற்றும் 34 பள்ளிகளிலும், மேற்கு மண்டலத்தில், 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 19, 20, 21, 22, 23, 24 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட 27 பள்ளிகளில் டெங்கு கொசு ஒழிப்பு சம்பந்தமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேற்கண்ட பள்ளிகளில், சின்டெக்ஸ் தொட்டிகளில் முறையாக சுத்தம் செய்து கொசுப்புழு உற்பத்தியில்லாமல் பராமரிக்கப்பட்டுள்ளனவா எனவும், சமையலறைகள் சுத்தமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா எனவும், பள்ளி வளாகத்தில் உபயோகப்படுத்தப்படாத பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் பேப்பர் கப்புகள் அகற்றப்படுகின்றனவா எனவும், பயிற்சிக்காக வைக்கப்பட்டுள்ள டயர்கள் மற்றும் மாடிகளில் மழைநீர் தேங்கி உள்ளனவா எனவும் ஆய்வு செய்து கொசுப் புழுக்களை அழிப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்களை தடுப்பதற்காக கோவை மாநகராட்சி சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...