வால்பாறை குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட கும்கி யானை வரவழைப்பு

வால்பாறையில் அமைந்துள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் வேலுச்சாமி என்பவரை யானை தாக்கி கொன்றதையடுத்து, கும்கி யானை வரவழைக்கப்பட்டு காட்டு யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.



வால்பாறையை அடுத்துள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் பகல் மற்றும் இரவு நேரங்களில் உலா வந்து வீடுகளையும், உடமைகளையும் சேதப்படுத்தி வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், கருமலை எஸ்டேட் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் இறந்ததையடுத்து அவரது உடல் நல்லடக்கம் செய்வதற்காக பொதுமக்கள் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அப்பகுதியில் இருந்த காட்டு யானை ஒன்று கூட்டத்தில் சென்ற வேலுச்சாமி என்பவரை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் உயர் அதிகாரிகள் நேரில் வந்து எங்கள் பாதுகாப்பு குறித்து உறுதியளித்தால் மட்டுமே இறந்தவரின் உடலை அப்புறப்படுத்துவோம் என்று பொள்ளாச்சி- வால்பாறை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து வால்பாறை வனச்சரக அலுவலர் சக்திவேல் மற்றும் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் சேகர், வால்பாறை காவல்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியம், காவல்துறை ஆய்வாளர், வட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின் இறந்த வேலுச்சாமியின் உடலை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு செய்ய எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தால் வனத்துறை அலுவலர் சுப்பையாவின் உடனடி உத்தரவின் பேரில் வால்பாறை வனச்சரக ஊழியர்கள் டாப்சிலிப்பில் இருந்து வரவழைக்கப்பட்ட கலீம் என்ற கும்கி யானையை வைத்து ஒற்றை காட்டு யானையை விரட்டுவதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.



மேலும், வனத்துறையின் சார்பாக இறந்த வேலுச்சாமியின் குடும்பத்திற்கு இழப்பீடாக அவரது மகன் கணேசனிடம் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...