நீலகிரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.474.48 கோடி கடனுதவி வழங்கிய தமிழக அரசுக்கு- மலைவாழ் மக்கள் நன்றி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 15266 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.474.48 கோடி கடனுதவிகளை வழங்கிய தமிழக அரசுக்கு மலை மாவட்ட மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் மொத்தம் 15266 மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளன. இதில் மொத்தம் 1,15,882 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 

வங்கிகள் மூலம் 2011- 2012 ஆம் ஆண்டு 2161 சுய உதவிக்குழுக்களுக்கு 48.29 கோடியும், 2012- 2013 ஆம் ஆண்டு 1858 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.47.30 கோடியும், 2013- 2014 ஆம் ஆண்டு 2434 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.71.92 கோடியும், 2014-2015 ஆம் ஆண்டு 2222 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.72.06 கோடியும், 2015- 2016 ஆம் ஆண்டு 2651 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.94.71 கோடியும், 2016-2017 ஆம் ஆண்டு 3049 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 104.88 கோடியும், 2017-2018 (11.08.2017) வரை 891 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.35.32 கோடியும் ஆக மொத்தம் 15266 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.474.48 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 1256 புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு ஊக்குநர் பிரதிநிதி பயிற்சி மற்றும் குழு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 



இதற்காக, மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் கடன் பெற்ற பயனாளிகள் தமிழக அரசிற்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...