கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி சி.இ.ஒ நியமனம் தொடர்பாக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்


கோவையை ஸ்மார்ட் சிட்டியாக்கும் திட்டத்திற்கும் அனுபவம் இல்லாத ஒருவரை முதன்மை செயல் அலுவலராக பணி நியமனம் செய்ததாக கூறி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கோவை மாநகரை ஸ்மார்ட் சிட்டியாக மத்திய அரசு அறிவித்த நிலையில் சுமார் 1500 கோடி மதிப்பிலான அத்திட்டத்திற்கு முதன்மை செயல் அலுவலராக சுகன்யா என்பரை நியமனம் செய்ததற்கு கோவை மாநகராட்சி நிர்வாகம். இதனை கண்டித்து தெற்கு தாலுகா அலுவலகம் முன்பாக பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எவ்வித முன் அனுபவம் இல்லாத சுகன்யா என்பவரை கோவை மாநகர ஸ்மார்ட் சிட்டி முதன்மை செயல் அலுவலராக நியமித்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதிமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பனர் கே.பி.ராஜூ என்பவரின் மகள் என்ற ஒரே காரணத்திற்காக சுகன்யாவை நியமித்துள்ளதாக புகார் தெரிவித்தார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரிந்துரைத்தின் பேரில் சி.இ.ஒ வாக நியமித்த மாநகராட்சி ஆணையர் விஜயகாத்திகேயன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். இத்துறையில் அனுபவம் மிக்க ஒருவரை தேர்வு செய்து பணி அமர்த்த வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், சுகன்யா அப்பொருப்பில் இருந்து நீக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...