குளித்தலை அடுத்த பெட்டவாத்தலை பகுதியைச் சேர்ந்தவர் சாரதா (55). கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கூலி வேலைக்காக கோவை வந்துள்ளார். இந்நிலையில், போளுவாம்பட்டி வனச்சரகம் பூண்டி தெற்கு சுற்று பட்டியார் கோயில் பதி, பென்னூசாமி கவுண்டர் தோட்டத்திற்கு அருகில் இன்று காலை சுமார் 6.30 மணியளவில் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்.
அப்போது, காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சாரதா மரணமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாரதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யானை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.