அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு குறித்த புகார் தெரிவிக்க வலைதளம் அறிமுகம்

அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்வோர்களின் மீது புகார்களை http://gdp.tn.gov.in என்ற வலைதளம் வாயிலாக தெரிவிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமப்பு மேற்கொள்ளப்பட்டது தொடர்பான புகார்களை பொதுமக்கள் தபால் மூலமாகவோ, அல்லது நேரடியாகவோ வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அளித்து வந்தனர்.

தற்போது, அந்த நடைமுறையை எளிமையாக்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்தே அரசு புறம்போக்கு நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பின் மீது நடவடிக்கை மேற்கொள்ள புகார்களை இணைய வழி மூலம் பதிவு செய்ய அரசு சார்பில் தனியாக http://gdp.tn.gov.in  என்ற வலைதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மட்டும் இந்த இணையவழியினை பயன்படுத்தி அரசு புறம்போக்கு நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு குறித்து புகார்களை பதிவு செய்து தீர்வு பெற அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...