வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கோரி மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம்


வால்பாறை பகுதியில் 66 தனியார் தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. அவற்றில், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவ்வாறு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 247 ரூபாய் மட்டுமே தினக்கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, வால்பறை தேயிலை தோட்டத் தொழிலாளா்களின் வாழ்க்கை மேம்படும் வகையில் கேரளாவிற்கு இணையான சம்பளம் வழங்கிட வேண்டும் என நீண்டகாலமாக அப்பகுதி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக இன்று, வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தியும், முறையாக ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வரும் தோட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், கேரள தோட்டத் தொழிலாளா்களுக்கு கிடைக்கும் சம்பளத்தைவிட மிக குறைவான சம்பளத்திற்கு ஒப்புக்கொண்டு 05.07.2017 -ம் தேதி தொழிலாளா்களுக்கு விரோதமாக துரோக ஒப்பந்தம் செய்தவா்களைக் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினா் சி.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் வி.கஸ்தூரிவாசு முன்னிலை வகித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட வால்பாறை தோட்டத் தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர்.

Newsletter

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...