கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே அணைகட்ட உச்சநீதிமன்றம் ஒப்புதல் கொடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது -நடிகர் சீமான்

கர்நாடகாவில் மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்டக் கூடாது என தமிழகத்தில் அனைவரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழகறிஞர் அணைகட்ட ஒப்புதல் கொடுத்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெறும் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்; 

அதிமுக இணைப்பே நாட்டுக்கு பிரச்சினையல்ல எனவும் இதையே பேசிக்கொண்டு இருப்பது அருவருப்பானது என தெரிவித்தார். கர்நாடகாவில் மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்டக் கூடாது என தமிழகத்தில் அனைவரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், 

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழகறிஞர் அணைகட்ட ஒப்புதல் கொடுத்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது எனவும், பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தொடந்து தடுப்பு அணைகளை கட்டி வருகின்றது. இதனால் தமிழகம் பாலைவனம் ஆகும் நிலையில் அதிமுக இணைப்பு பற்றி பேசிக்கொண்டு இருப்பது சரியல்ல எனவும் அவர் தெரிவித்தார். 

நீட் விவகாரத்தில் பெரும்பாலான மாணவர்கள் பாதிக்கப்படுவதை மட்டும் பேசவேண்டும் என்றவர் நிரந்தரமாக நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். தமிழகத்தில் பா.ஜ.க கால் ஊன்ற முடியாது என தெரிவித்தவர். 

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு வலுவான வாதத்தினை முன் வைக்க தவறி விட்டது எனவும், தமிழகம் பெரு முதலாளிகளின் வேட்டைக்காடாக மாறி வருகின்றது எனவும் தெரிவித்தார். எங்களுக்கு ரஜினி, கமல் தேவையில்லை. காமராஜரும், ஜீவானந்தமும், சிங்காரவேலர் போன்ற தலைவர்கள் தலைவர்கள் விரைவில் உருவாவர்கள் என்று தெரிவித்தார். 

சென்னையில் ரஜினிகாந்த் மனைவி ஆஸ்ரம் பள்ளியில் நடந்தை செய்தியாக கூட ஊடகங்கள் போடவில்லை எனவும், ரஜினிகாந்த் ஆஸ்ரம் பள்ளிக்கு போட்ட பூட்டை முதலில் திறக்கட்டும் பின்னர், நாட்டை காப்பாற்ற ரஜினிகாந்த் வரட்டும் என தெரிவித்தார்.

ஒரு தலைமுறை கோபமாக அரசை பார்த்துக்கொண்டு இருக்கின்றது என்றவர். மெரினாவில் எம்,ஜி.ஆர் சிலை இருக்கிறது, தமிழன் சிவாஜி கணேசன் சிலையை ஏதேதோ காரணம் சொல்லி எடுக்கின்றனர் எனவும் சீமான் குற்றம்சாட்டினார்.

மேகதாது பகுதியில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை அதிர்ச்சியாகவும், வேடிக்கையாகவும் இருக்கின்றது என கூறியவர் மேகதாது விவகாரத்தில் அரசின் செயல்பாடு சரியில்லை என குற்றம் சாட்டினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...