தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 83-வது அறிவியல் உழைப்பாளர்கள் மாநாடு பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு. ராமசாமி தனது தலைமையுரையில் விவசாயிகள் முன்னேற்றத்தில் வேளாண் விஞ்ஞானிகளும் விரிவாக்கத்துறை அலுவலர்களும் இணைந்து செயலாற்றுவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில், சிறப்பு முகவுரை ஆற்றிய வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங்பேடி, விவசாய பயிர் குறைதீர்க்கும் பொருட்டு மாவட்ட அளவிலான வேளாண் வழிகாட்டி மையங்களை நிறுவ ஆலோசனை வழங்கினார். மேலும், வேளாண் விளைநிலங்களில் வேளாண் பதன்செய் குறு ஆலைகள் நிறுவுவதன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் அடையலாம் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை, விதை சான்றளிப்பு, வேளாண் பொறியியல், பட்டுப்பூச்சி, வனத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர். இக்கருத்தரங்கில் பல்வேறு வகையான வேளாண் பயிர்கள் மற்றும் வேளாண் தொழில் நுட்பங்களைப் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.
அங்கக வேளாண்மை, எண்ணெய் வித்து ரகங்கள், கொள்ளு ரகங்கள், ஓய்வு பருவ முருங்கை, நீர்வழி ஊட்டச்சத்து, தோட்டக்கலைப் பயிர்கள் மற்றும் பணப்பயிர்கள் போன்றவை விவாதிக்கப்பட்டன. காய்கறிப்பயிர்களில் உயர் கலப்பின விதைகள் உற்பத்தி செய்யும் பொருட்டு மாநில தோட்டக்கலைப் பண்ணைகளுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் விதைகள் ஆகியவற்றை வேளாண்மைப் பல்கலைக்கழகம் வழங்குவதின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது.
வேளாண்பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர் மகேஸ்வரன், பல்வேறு பயிர்களில் நடைபெற்றுவரும் ஆராய்ச்சிகள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு வேளாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி, தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை ஆணையர் அர்ச்சனா பட்னாயக், தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வணிக துறை ஆணையர் சுஞ்சோன்கம் ஜடக் சிரு, தமிழ்நாடு அரசு சர்க்கரை ஆணைய தலைவர் மகேசன் காசிராஜன், தமிழ்நாடு வேளாண் முதன்மை பொறியாளர் தெய்வேந்திரன், தமிழ்நாடு முதன்மை வனப் பாதுகாப்பளர் கவுஷல், பட்டுப்பூச்சி வளர்ப்பு துறை உதவி இயக்குனர் மனோகரன் மற்றும் கோவை மாவட்ட விதை சான்றளிப்பு மற்றும் அங்கக வேளாண்மை சான்றளிப்பு துறை இயக்குனர் மூர்த்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மைய இயக்குனர் ரவி விழா நன்றியுரை ஆற்றினார்.