குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருசக்கர வாகன பயணம்

குழந்தைகள் மீது நடைபெறும் வன்முறைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கோவையை சேர்ந்த மென்பொறியாளர் இருசக்கர வாகன பயணம் துவக்கியுள்ளார்.

கோவை ரத்தினபுரியை சேர்ந்த தண்டபாணி லோகநாதன் சரவணம்பட்டியில் தனியார் நிறுவணத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். சைக்கிளிங் பிரியரான இவர் ஈரோடு, சேலம், உதகை மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் கேரள மாநிலம் வரை பல்வேறு சமூக விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். 

இதன் ஒருபகுதியாக குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க வேண்டும், தூய்மை இந்தியாவை உருவாக்குவோம் என்பதை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை தற்போது துவக்கியுள்ளார். 

இதுகுறித்து தண்டபாணி லோகநாதன் கூறுகையில், குழந்தைகள் மீதான வன்முறைகள், அலட்சியங்கள் காரணமாக நாள்தோரும் குழந்தைகள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகின்றனர். எதிர்கால இந்தியாவின் கண்களாக உள்ள இந்த குழந்தைகளை பாதுகாக்க வேண்டும், தூய்மை இந்தியாவை படைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பிரச்சார இயக்கத்தில் பங்கேற்று வருகிறேன் என்றார்.

இதன் ஒருபகுதியாக காஷ்மீரில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தண்டபாணி லோகநாதன் துவங்கிய இந்த பயணம் ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, தில்லி, உத்திரபிரதேஷ், மத்தியபிரேதேஷ் உள்ளிட்ட 13 மாநிலங்களின் வழியாக ஆறாயிரம் கிலோ மீட்டர் பயணத்தை மேற்கொண்டு ஆகஸ்ட் 24ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் வந்தடைய உள்ளார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...