குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திட மாவட்ட ஆட்சியர் அறிவுரை

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் தேவராயபுரம் ஊராட்சயில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிவுரை அறிவுரை வழங்கினார்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் தேவராயபுரம் ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று சுதந்திரதின விழாவையொட்டி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:-



கிராமசபைக் கூட்டத்தின் நோக்கம் பொதுமக்கள் ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே ஆகும். அதனடிப்படையில், கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் முழு அளவில் கலந்து கொண்டு ஊராட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை மேற்கொள்ள தீர்மானம் மூலம் நிறைவேற்றிட மிகப் பயனுள்ளதாக இருக்கும். அதனால், தங்கள் பகுதியில் கிராமசபைக் கூட்டம் நடைபெறும் போது பொதுமக்கள தவறாமல் கலந்து கொண்டு ஊராட்சியின் வளர்ச்சிக்கு அடிப்படை வசதிகளை பெறுவதில் உறுதுணையாக இருந்திட வேண்டும்.

தேவராயபுரம் ஊராட்சியில், அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பிறை கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் முறையாக கழிப்பறையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். தனிநபர் கழிப்பறையை பயன்படுத்தி தூய்மையை பாதுகாக்க வேண்டும். கோவை மாவட்டம் திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற தூய்மை மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு அனைவரும் உறுதுணையாக இருந்து திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற பகுதியாக மாற்றிட வேண்டும். 

பொதுமக்கள் அனைவரும் குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தங்கள் வசிக்கும் பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். குடிதண்ணீர் வைக்கும் பாத்திரங்களை நன்றாக சுத்தம் செய்து பாதுகாப்பான முறையில் மூடிவைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

மேலும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி குறித்த செலவினம், சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள்  முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள், மகளிர் திட்டம், மேலும், மத்திய மாநில அரசுகளின் ஒருங்கினைப்புடன் தமிழகத்தில் 1000 கிராம ஊராட்சிகளை வறுமையே இல்லாத ஊராட்சிகளாக மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி 2019-க்குள் மாற்றிட அந்தியோதயா இயக்கம் உள்ளிட்ட இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

முன்னதாக, புதிய இந்தியாவை உருவாக்கிடும் வகையில் புதிய இந்தியா உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முன்னிலையில் பொதுமக்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், உதவி ஆட்சியர் சரண்யாஹரி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பத்மாவதி, மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...