கோவை சௌரிபாளையத்தில் சாலையில் வழிந்தோடும் நீரில் துணி துவைக்கும் முதியவர்



கோவைக்கு என்று தனியே பல்வேறு அடையாளங்கள் உள்ளன. ஆனால் சமீபகாலமாக, குண்டும் குழியுமான சாலைகள் கோவையின் மிக முக்கிய அடையாளமாக மாறிவிட்டது. 

பாதாள சாக்கடைப் பணிகள், தொலைபேசி இணைப்பு பதிக்கும் பணிகள் என்று பல்வேறு காரணங்களுக்காக தோண்டப்பட்ட சாலைகளை, மீண்டும் மீண்டும் தோண்டுவது மட்டுமில்லாமல் அவற்றை சரிவர மூடாதது, தரமற்ற சாலைகள் இடுவது போன்ற செயல்களால் அந்த சாலைகள் பழுதாகி பெரிய பள்ளங்களை உருவாக்கி விடுகின்றன. 

மழை பெய்ந்து ஓய்ந்த பின்பு, இந்த குழிகளில் மழை மற்றும் கழிவு நீர் பல நாட்கள் தேங்கி விடுவது வழக்கம். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இதை நிரூபிக்கும் விதமாக, கோவை புலியகுளம் பகுதியில் இருந்து சவுரிபாளையம் நோக்கி செல்லும் வழியில் தான் இந்த வினோதத்தை காண முடிந்தது. 

இந்த சாலையில் பல நாட்களாக உள்ள சாலை குழி அருகே குடிநீர் குழாய் உடைந்து நீரை கசிய விட்டுக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது சிறு சிறு விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்ட இந்த சாலையில், இன்று காலை முதியவர் ஒருவர் தனது ஆடைகளை துவைக்க தொடங்கிவிட்டார். 



சரியான மின் விளக்கு வசதி இல்லாதமையால் இரவு நேரங்களில் இவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுவதும் வாடிக்கையாகி போய்விட்டது. 

உடைந்த குழாய் நீரினால் ஆடைகளை துவைக்கும் இவர், அவற்றை உலர்த்த மின்சாரமற்ற கம்பிகளை நாடுவாரோ என்னவோ??

இன்றும், கோவையில் பெரும்பாலான பகுதிகளில் நீர் பற்றாகுறை தலைவிரித்து ஆடிக்கொண்டு இருக்கும் நிலையில்,  மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுபோன்று குடிநீர் குழாய்கள் உடைந்து 24 மணி நேரமும் நீர் வீணாய் போவது மாநகராட்சியின் அலட்சிய போக்கையே  காட்டுகிறது.

மக்களிடம்  நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தும் மாநகராட்சியே இது போன்று பிரச்சனைகளை உடனடியாக கவனிக்காமல் இருப்பது "அறிவுரை எல்லாம் மக்களுக்கு தான், எங்களுக்கு இல்லை" என்று கூறுவது போல் உள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...