விவசாயிகளின் நலன் கருதி, யானையை விரட்ட புதிய நவீன துப்பாக்கி அறிமுகம்

யானை மனித மோதல்கள், பயிர் சேதம் தவிர்ப்பதற்காக விவசாயிகள் கேட்கும் நவீன துப்பாக்கியை வழங்க தயாராகும் வனத்துறை. விவசாயிகள் கேட்பதைப் போல துப்பாக்கி உரிமம் வழங்க அரசு நிர்வாகிகள் மறுத்து வந்ததால், யானையால் பாதிக்கப்படும் விவசாயிகள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் நலன் கருதியும், பயிர்கள் மற்றும் உயிரிழப்புகள் யானையால் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வனத்துறை புதிய துப்பாக்கி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வன விலங்குகளை விரட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பைபர் குழாய் துப்பாக்கியின் செயல்பாடு பயன்பாட்டிற்கு எளிதாகவும், குறைவான விலையில் தயாரிக்க முடியும் என்ற காரணத்தால் தமிழக வனத்துறை கோவை பெரிய நாயக்கன்பாளையம் சரகத்திலுள்ள விவசாயிகளுக்கு இதை வழங்க இருக்கிறது.

பைபர் குழாய் துப்பாக்கி குறித்து வனத்துறையினர் கூறுகையில், பைபர் குழாயினுள் கார்பைடு கல் மற்றும் ஐந்து மில்லி நீர் ஊற்றி லைட்டரை கொண்டு பற்ற வைத்தால் வெடி சத்தமும், அழுகிய முட்டை போன்ற தூர் நாற்றமும் வெளிவருவதால், யானைகள் அங்கிருக்க முடியாமல் ஓடும் நிலைக்கு தள்ளப்படும் எனவும் யானையை விரட்ட பயன்படுத்தப்படும் பட்டாசுகள் மற்றும் ஆட்களின் செலவுகளை் குறைக்க வாய்புள்ளது என தெரிவித்தனர். 800 ரூபாயில் தயாரிக்கக் கூடிய இந்த தூப்பாக்கியை விவசாயிகள் எளிதாக வாங்கி பயன்படுத்த முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...