கோவையை மிரட்டும் காய்ச்சல் கயவன் : டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி

கோவையில் கடந்த ஒரு மாதமாக டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. கடந்த மாதம் 50-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிலர் உயிரும் இழந்தனர்.

இந்த நிலையில், டெங்கு தொற்றுக்கு ஆளாகி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது முதியவர் இன்று பலியாகியுள்ளார்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ் (68). டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கோவையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்றுவந்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாகராஜ் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவையில் கடந்த இரண்டு மாதங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. இது கோவை மக்களை பீதியடையச் செய்துள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...