திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தன் கடமைகளை சுறுசுறுப்பாக செய்து வருகிறார்- சிபிஐ கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தன் கடமைகளை சுறுசுறுப்பாக செய்து வருகின்றார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-



ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டு 38 நாட்கள் கடந்தும் இதுவரை அந்த வரி விதிப்பு குறித்து ஒரு தெளிவு பிறக்கவில்லை. முறையாக நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி வரி குறித்து விவாதிக்கப்படவில்லை. வரி விதிப்பு கொள்கையில் சமூக நீதியும் இல்லை, மேக் இன் இந்தியா திட்டமும் இல்லை. 

ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக என்ற பெயரில் தற்போது கட்சியும் இல்லை, கட்சி சின்னமும் இல்லை" என்றார். தொடர்ந்து, தற்போதை ஆட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றது என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு முறையற்று பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க விரும்பவில்லை என த.பாண்டியன் கூறினார்.

தொடர்ந்து, அவர் பேசுகையில், அதிமுக பல அணிகளாக பிரிந்து இருப்பதை பயன்படுத்திக்கொண்டு பாஜக ஆட்சி நடத்துகின்றது. 

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும். குறிப்பாக பேரறிவாளனை எந்த வித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும். காந்தி கொலையில் ஈடுபட்டவர்கள் கூட 10 ஆண்டுகளில் வெளியில் வந்துவிட்டார்கள். ராஜீவ்கொலையில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்டோர் சட்டவிரோதமாக சிறைவைக்கப்பட்டு இருக்கின்றனர்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தன் கடமைகளை சுறுசுறுப்பாக செய்து வருகின்றார். நீட் தேர்வு, மீத்தேன், குடும்ப அட்டை என அனைத்து மக்கள் பிரச்சனைகளிலும், வறட்சி காலங்களிலும் தொண்டர்களை தூர் வார இயக்கியது என ஸ்டாலின் நடவடிக்கைகள் அனைத்தும் பாராட்டத்தக்கது. அதே வேளையில் அதிமுகவின் கொள்கைகளுக்கு எதிராக நடைபெறும் விசயங்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் அதிமுகவின் அனைத்து பிரிவுகளும் இருக்கின்றன. இவர்கள் தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் போக்கை கண்டிப்பதில்லை. அதிமுகவின் அனைத்து அணிகளும் தமிழகத்தை தலைகுனிய வைத்துவிட்டனர்" என்றார். 

இந்நிகழ்வின் போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...