தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழுத்தலைவர் எம்.எல்.ஏ எஸ்.முத்தையா தலைமையில் ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழுத்தலைவர் எம்.எல்.ஏ எஸ்.முத்தையா தலைமையில் கோவை சுங்கம்,  தமிழ்நாடு போக்குவரத்துக்கழக பணிமனை, ஆவின் பாலகம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து தகவல் தொழில் நுட்ப பூங்கா கூட்டரங்கில் வேளாண்மைத்துறை, தாட்கோ, போக்குவரத்துத்துறை மற்றும் தொழில்துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழுத்தலைவர் எம்.எல்.ஏ எஸ்.முத்தையா தலைமையில் நடைபெற்றது.

பின்னர், தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழு சுங்கம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையில் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பணியாளர்களுக்கு பணிமனையிலுள்ள உணவகத்தில் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா? என்றும் பேருந்துகளை இயக்கும்போது எந்த விதமான விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.



25-ஆண்டுகள் விபத்துகளே இல்லாமல் பேருந்துகளை இயக்குகின்ற ஒட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுப்பொருட்களை வழங்கி தமிழ்நாடு அரசு  ஊக்குவிக்கப்படுகின்றது. மேலும் பேருந்துகளை விபத்தில்லாமல் பாதுகாப்பாக இயக்க ஒட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் ஒட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர்களிடம் தனித்தனியே கருத்துகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் பணியில் மன நிறைவுடன் இருப்பதாக தெரிவித்தனர் என தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் தெரிவித்தார்.

பின்னர், பேரூர், பச்சாப்பாளையம் ஆவின் பால் நிலையத்தில் ஒரு நாளைக்கு சுமார் 2.60லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகின்றது.  இதில் 1.52லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகின்றது. 30 ஆயிரம் லிட்டர் பால் கேரள மாநிலத்திற்கு விநியோகம் செய்யப்படுகின்றது. மேலும் சுமார் 1லட்சம் லிட்டர் பாலில் பால் பவுடர், வெண்ணெய், நெய், பால்கோவா போன்ற பால்பொருட்கள் ஆவின் நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது என தெரிவித்தார்.

மேலும், தகவல் தொழில்நுட்ப பூங்காவானது சுமார் 17.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் 70 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் சுமார் எட்டாயிரம் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் வளர்ச்சியடைய செய்து வேலைவாய்பினை பெருக்கி மென்பொருள் உற்பத்தியை அதிகரிக்க செய்து கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.முத்தையா தெரிவித்தார்.

இந்த ஆய்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள், தகவல் தொழில்நுட்ப பூங்கா மேலாண் இயக்குநர் இளங்கோவன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் (பொ) கே.பாண்டி, பொது மேலாளர் இ.கோவிந்தராஜ், வேளாண் உதவி இயக்குநர் (விற்பனை) மோகனசுந்தரம், தாட்கோ பொது மேலாளர் கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் (பொ) ராஜ்குமார் மற்றும் பொது நிறுவனங்கள் குழு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...