கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், 22-வது வார்டுக்குட்பட்ட காமராஜபுரம் பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைதொடர்ந்து, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் விதமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். மேலும், அப்பகுதியில் டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கினார்.

தொடர்ந்து, 12-வது வார்டுக்குட்பட்ட மணியம்காளியப்பன் வீதி, கே.கே.புதூர் பகுதியில் வாரம் தோறும் புதன்கிழமை மட்டும் மக்காத குப்பை சேகரிக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் எஸ்.வி.குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.