ஈஷா அவுட்ரீச் நடத்தும் இலவச கண்சிகிச்சை முகாம்

ஈஷா அவுட்ரீச், கோவை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும் இலவச கண்சிகிச்சை முகாம் (ஜூலை 16) வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஷா யோகா மையம் அருகில் உள்ள விராலியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் கண்களில் புரை உண்டாகுதல், மாறுகண், நீர் அழுத்த நோய், மாலைக்கண், சீழ் மற்றும் நீர்வடிதல், தூரப்பார்வை, கிட்டப் பார்வை போன்ற பிரச்சனைகளுக்கு இலவச பரிசோதனை செய்யப்படும்.

கண்புரை நோயாளிகள் முகமலிருந்து கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படுவார்கள். இவர்களுக்கு I.O.I. லென்ஸ், சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து செலவு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற பார்வைக்கோளாறு இருப்பவர்களுக்கு மிககுறைந்த விலையில் தரமான கண்கண்ணாடி வழங்கப்படும்.

முகாமிற்கு வருபவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டையின் நகல் எடுத்து வரவேண்டும். மேலும் வீட்டு முகவரியை எழுதி எடுத்து வரவேண்டும்.

முகாமில் கலந்து கொள்ளவும் மேலும் விவரங்களுக்கு கீழுள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும் 9442649025

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...