சௌரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் 4 டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம், சௌரிபாளையம் பகுதியில் உள்ள கருணாநிதி நகர், தேர்வீதி, கல்லறைவீதி, ஜி.வி. ரெசிடென்சி என ஒரே பகுதியில் அருகருகே 4 டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது குடிக்க வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட பகுதியில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளை அகற்றக்கோரி இன்று கருப்பு கொடிகளுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 24 மணி நேரமும் அக்கடைகளில் மதுவிற்பனை நடைபெற்று வருகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் போராட்டம் நடத்திய போது டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் உத்திரவாதம் அளித்த நிலையிலும், இன்றுவரை டாஸ்மாக் கடைகளை அகற்றவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.