குடியரசு தலைவர் தேர்தலில் ஆதரவளிப்பது குறித்து அதிமுக நிர்வாகிகள் எடுக்கும் முடிவிற்கு நானும் ஆதரவு - எம்.எல்.ஏ. கருணாஸ்

குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என அதிமுக நிர்வாகிகள் எடுத்த முடிவிற்கு தோழமை கட்சியான நானும் உடன்படுகிறேன் என முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தெரிவித்தார்.

கோவை இராமநாதபுரம் பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா  நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், 

'எனக்கு அரசியல் அங்கீகாரம் அளித்தது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும்,  அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவும் தான். குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என அதிமுக நிர்வாகிகள் எடுத்தமுடிவிற்கு தோழமை கட்சியான நானும் உடன்படுகிறேன். 

குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஒப்புதல் பெற்று பாஜக-விற்கு ஆதரவு அளிக்கப்பட்டதா என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு அப்படி தான் மூத்த நிர்வாகி தம்பிதுரையும், துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தெரிவித்தனர்' என கருணாஸ் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஒ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும். அதிமுகவில் நடக்கும் உள்கட்சி பிரச்சனைகள் குறித்து பேச எனக்கு உரிமையில்லை. 

ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வரலாம், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தவறில்லை. அரசியல் வியாபாரம்  அல்ல, மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் யாரும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு பிடித்தால் அவர்களை ஆதரிப்பார்கள். 

நீட் தேர்வு விவசாயிகள் பிரச்சனைகள் உள்ளிட்ட விவகாரங்களில் மாநில அரசு எந்த விதத்திகும் தமிழர்களின் சுயமரியாதையையும், உரிமைகளையும் விட்டுத்தராது. அதிமுக ஆட்சி கலைக்கப்பட வேண்டுமென்பது மக்கள் விரோத கருத்து. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் திட்டங்களை அறிவித்தது போல, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் 110 விதியின் கீழ் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து நல்லாட்சி நடத்தி வருகிறார். 

4 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தொடரும். எதிர்கட்சி என்பது ஆளுங்கட்சி மீது குறை கூறுவது இயற்கையானது தான். அதிமுக ஆட்சி குறித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறும் கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்துக்கள்' என முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜ்குமார், சக்திவேல், திருமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...