மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரிக்கும் புதிய திட்டத்தினை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அனைத்து மண்டல வார்டு பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரமாகும் மக்காத குப்பை மற்றும் மறு சுழற்சி செய்யும் குப்பைகளை வாரம் ஒரு முறை புதன் கிழமை மட்டும் தவறாது வாங்கவும் மற்றும் மற்ற நாட்களில் மக்கும் குப்பைகளை வாங்கவும் அனைத்து மண்டல துப்புரவு அலுவலர்கள், அனைத்து துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து துப்புரவு பணி மேற்பார்வையாளர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இன்று மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டல வார்டு பகுதிகளிலும் மக்காத குப்பை மற்றும் மறு சுழற்சி செய்யும் குப்பைகள் மட்டும் வாங்கப்பட்டது. தடாகம் ரோடு மற்றும் டி.வி.எஸ் நகர் பகுதியில் வார்டு எண். 6, மக்காத குப்பை மற்றும் மறு சுழற்சி செய்யும் குப்பைகள் மட்டும் வாங்கும் பணியினை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கிழக்கு மண்டலம், சேகரம் செய்யப்பட்ட மக்காத குப்பை 3.7 டன், மேற்கு மண்டலம், சேகரம் செய்யப்பட்ட மக்காத குப்பை 8.4 டன், வடக்கு மண்டலம், சேகரம் செய்யப்பட்ட மக்காத குப்பை 4.2 டன், தெற்கு மண்டலம், சேகரம் செய்யப்பட்ட மக்காத குப்பை 7.9 டன், மத்திய மண்டலம், சேகரம் செய்யப்பட்ட மக்காத குப்பை 18.8 டன், ஆகமொத்தம் சேகரம் செய்யப்பட்ட மக்காத குப்பைகள் 43 டன்.

இத்திட்டத்தின் நோக்கம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து தருவதற்கு வசதியாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து தர வேண்டும். இத்திட்டத்தின் மூலம் மக்கும் குப்பை வாரத்தில் ஆறு நாட்களுக்கும், மக்காத குப்பை புதன் கிழமைகளிலும் சேகரிக்கப்படும். இதன் மூலம் குப்பைகள் தரம் பிரித்தல், சேகரித்தல் மற்றும் அகற்றுதல் ஆகியவை அறிவியல் ரீதியாக நடத்தப்படும்.

ஆகவே, பொது மக்கள் அனைவரும் இப்புதிய திட்டத்திற்கு ஆதரவளித்து கோவை மாநகரை தூய்மையான மாநகராட்சியாக உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...